அறிமுகம்
கண்டி, உடுநுவர பிரதேச ஆண் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு
உருவாக்கப்பட்ட Haja Hussain Education and Development Services (HEADS) அமைப்பு கடந்த 06
வருடங்களாக க.பொ.த. உயர்தர தமிழ் மொழி மூல வர்த்தகப் பிரிவு மாணவர்களை
வழிநடாத்துவதில் முன்னின்று செயற்பட்டுவரும் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
இது பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் பூரணமான ஆய்வுக்குப் பின் வடிவமைக்கப்பட்ட பகுதி நேர செயற்றிட்டமொன்றாகும்.
இங்கு மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் அனுமதியே வழங்கப்படுவதுடன் உள்வாங்கப்படும் ஒவ்வொரு
மாணவனும் தனித்தனியாக கண்காணிக்கப்படுவதுடன் அவர்களின் முன்னேற்றம் தொடர்பாக
கரிசனை செலுத்தப்படும் வகையில் இச்செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்பித்தல் முறைமை
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வளவாளர்கள் காணப்படுவதுடன் ஒவ்வொரு
பாடமும் வேறுபட்ட வளவாளர்களால் கற்பிக்கப்படும்.
1 1/2 வருடங்களில் முழுப்பாடப்பரப்பும் பூர்த்தியாக்கப்படுவதுடன் அதன் பின்னர்
முழுமையாக பரீட்சைக்கான தயார்படுத்தல் மேற்கொள்ளப்படும்.
பாடப்பரப்புக்கள் உரிய நேரத்திற்கு பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் அலகு ரீதியான
பரீட்சைகள், மாதிரி வினாப்பத்திரம், மீட்டல் வகுப்புக்கள், தொடர் கருத்தரங்குகள்
போன்றன மூலம் மாணவர்களது அடைவு மட்டம் உறுதி செய்யப்படும்.
சிரேஷ்ட மாணவர்கள் ஊடாக மீட்டல் வகுப்புக்களின் கண்காணிப்பு இடம்பெறுவதுடன்
மாணவர்களுக்கான திறன் விருத்தி நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
பரீட்சை நெருங்கும் சந்தர்ப்பத்தில் தங்கிப் படிக்கக்கூடிய வசதிகள் செய்து
கொடுக்கப்படும். (எதிர்காலத்தில் விடுதி வசதிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.)
பாடத்தெரிவு
வர்த்தகப்பிரிவில் பொருளியல், வணிகக் கல்வி, கணக்கீடு, மற்றும் ICT ஆகிய பாடங்கள்
கற்பிக்கப்படும்.
மேலும், அனைத்து மாணவர்களும் க.பொ.த. உயர்தர படிப்புடன் ஒருங்கே AAT தகைமையையும்
பயில வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்
க.பொ.த சாதாரண தர சித்தி எய்தி உயர் தர வகுப்புக்கு தகுதி பெற்றிருத்தல்.
க.பொ.த உயர் தரத்தை பாடசாலையொன்றில் கற்க தீர்மானித்திருத்தல்.
உடுநுவர பிரதேசம் அல்லது அதற்கு அண்டிய பகுதிக்குட்பட்ட மாணவர்களாக இருத்தல்
வேண்டும், இல்லையேல், முன்குறிப்பிட்ட பகுதியில் தங்கியிருந்து படிக்கக்கூடிய
வசதியுள்ளவராக இருத்தல் வேண்டும்.
கட்டணங்கள்
அனைத்து மாணவர்களிடமும் அனுமதிக்கட்டணம் ஒன்று அறவிடப்படும்.
AAT திட்டத்திற்கென தனியான குறைந்த விலையிலான ஒரு கட்டண அமைப்பு நடைமுறையில்
உள்ளது.
விண்ணப்பிக்கும் முறைமை
இத்தோடு உள்ள APPLY பொத்தானை CLICK செய்வதன் மூலம் பெறப்படுகின்ற
விண்ணப்பத்தை பூர்த்திசெய்து எதிர்வரும் 2026, ஜூலை 05 ஆம் திகதிக்கு முன்னர்
சமர்பிக்கவும்.
மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சையின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மாணவர்கள்
சேர்த்துக் கொள்ளப்படுவர்.
Haja Hussain Education and Development Services #282/3, Riverside Garden, Mosque Road, Dellanga, Gelioya, Kandy TP: 077 887 5654